/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கோர்ட்டில் 228 வழக்குகளுக்கு தீர்வு
/
திருவாடானை கோர்ட்டில் 228 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 11, 2025 04:43 AM
திருவாடானை: திருவாடானை நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் நேற்று முன்தினம் நடந்தது. நீதிபதிகள் மனிஷ்குமார், ஆன்டனி ரிஷந்தேவ் முன்னிலை வகித்தனர்.
இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளும் விதமான சமரசம் எற்படுத்தக் கூடிய சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு, சிறு குற்றங்கள், செக் மோசடி, வங்கி வராக் கடன், நிலமோசடி வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டன.
மொத்தம் 646 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 228 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
குடும்ப பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியர் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கபட்டது. வராக்கடன் மற்றும் அபராதம் உட்பட ரூ.80 லட்சத்து 68 ஆயிரத்து 858 இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக வட்ட சட்ட பணிகள் குழுவினர் தெரிவித்தனர்.