/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய 3 பேர் கைது
/
வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய 3 பேர் கைது
ADDED : ஆக 12, 2024 11:37 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஜார் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரன்கோட்டை பகுதியில், வாளால் ஒருவர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்றபோது, சூரன்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் மகன் அபிஷேக், 24, என்பவர், நீண்ட வாளால் கேக் வெட்டி, தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
போலீசாரை பார்த்தவுடன் அனைவரும் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மூன்று பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் சூரன்கோட்டையைச் சேர்ந்த நிர்மல், 32, கார்த்திகேயன், 21, மணிகண்டன், 23, என்பது தெரிந்தது. தப்பி ஓடிய அபிஷேக்கை தேடுகின்றனர்.

