/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் பறிமுதல்
/
அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : மே 13, 2024 12:20 AM
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட மூன்று வெளியூர்ஆட்டோக்களை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில்நடந்த கூட்டத்தில் சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேவையான முன் எச்சரிக்கைநடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது
இதன்படி ராமேஸ்வரம்திட்டக்குடி பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பஸ்கள் நிறுத்தாததால்விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இது குறித்துஅரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அறிவிப்புசெய்து உரிய இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு கையெழுத்துபெறப்பட்டது.
இதனை உறுதி செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்ேஷக்முகமது, ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் திட்டக்குடிசந்திப்பில் ஆய்வு செய்தனர்.
குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல்இருந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
வெளியூர்களில் இருந்து இயக்கப்பட்ட 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெறும். வெளியூர் ஆட்டோக்களைஇயக்கினால் பறிமுதல் செய்யப்படும், என போக்குவரத்துத்துறை சார்பில்எச்சரிக்கை விடுக்கப்பட்டது.-----