/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாடு திருடிய 3 பேர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்
/
மாடு திருடிய 3 பேர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்
ADDED : செப் 13, 2024 05:01 AM

திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் வத்தாபட்டியை சேர்ந்தவர் செல்வி 40. இவருக்கு சொந்தமான ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பசு மாடுகள் வயல்காட்டில் மேய்ச்சலுக்கு சென்ற போது மாயமானது.
செல்வி புகாரில் திருவாடானை போலீசார் மாடுகளை திருடிய ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியாங்கோட்டை பிரபாகரன் 38, அழுந்திக்கோட்டை அண்ணாமலை நகர் சிவஜோதி 40, சின்னக்கீரமங்கலம் முருகேசன் 55, ஆகிய மூவரையும் கைது செய்து ஒரு சரக்கு வாகனத்தை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மாடுகள் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வயல்காட்டிற்கு மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகளை பிடித்து அப்பகுதியில் உள்ள கண்மாய்க்குள் கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் மரத்தில் கட்டி வைத்து விடுவார்கள்.
அன்று இரவு சரக்கு வாகனத்துடன் சென்று மாடுகளை அதில் ஏற்றி தேவகோட்டை மாட்டு சந்தையில் விற்பார்கள். பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட மாடுகளை திருடியிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.