/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
101 படகில் 3424 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல விருப்பம்
/
101 படகில் 3424 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல விருப்பம்
101 படகில் 3424 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல விருப்பம்
101 படகில் 3424 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல விருப்பம்
ADDED : மார் 10, 2025 11:45 PM

ராமேஸ்வரம்; கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் ராமேஸ்வரத்தில் இருந்து 101 படகுகளில் 3424 பக்தர்கள் பங்கேற்க விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்க உள்ளது. விழாவில் பங்கேற்க மார்ச் 14ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் விசைப்படகு, நாட்டுப்படகில் பக்தர்கள் செல்ல உள்ளனர்.
இந்த விழாவில் 78 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகளில் செல்ல 3424 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களில் குற்ற பின்னணி, குற்ற வழக்குகள் இருப்பவர்கள் குறித்து மனுக்களை மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் ஆய்வு செய்த பிறகே பக்தர்களின் இறுதிப் பட்டியலை தேர்வு செய்து மார்ச் 14ல் படகில் செல்ல போலீசார் அனுமதி வழங்குவார்கள்.
மேலும் விழாவுக்கு செல்லும் பக்தர்கள் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருள்கள், சிகரெட், பிடி உட்பட போதைப் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.