நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரில் இருந்து கப்பங்குடி செல்லும் ரோட்டோர ஆற்றுப்பாலத்தில் சில இளைஞர்கள் மது பாட்டில்களுடன் மது அருந்த இருந்தனர். அவ்வழியாக சென்ற ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., இளங்கோவன் வேறு பகுதிக்கு செல்லுமாறு கூறியும் கேட்காமல் மது அருந்த முற்பட்டனர்.
இதையடுத்து மேலவயல் பகுதியைச் சேர்ந்த ராமு 27, கவுதமன் 30, செக்கங்குடி மார்க்கோ 29, கோவிந்தமங்கலம் பிரகாஷ் 19, ஆகியோரை கைது செய்தார்.