/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடுகள் பலி
/
மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடுகள் பலி
ADDED : ஜூன் 10, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : -கடலாடி அருகே மங்களம் ஊராட்சி பூலித்தேவன் நகரில் ஏராளமானோர் கால்நடை வளர்க்கின்றனர். நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு சென்ற மங்களம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து உடையாரின் ஒரு பசு, புலித்தேவன் நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரின் பசு மாடு, முருக வள்ளியின் இரண்டு பசு மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.
பசு மாடுகள் இறப்பிற்கான காரணங்கள் தெரியவில்லை. எனவே கடலாடி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து இறந்து போன பசுக்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.