/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
400 கிலோ புகையிலை பறிமுதல் வீட்டில் பதுக்கிய இருவர் கைது
/
400 கிலோ புகையிலை பறிமுதல் வீட்டில் பதுக்கிய இருவர் கைது
400 கிலோ புகையிலை பறிமுதல் வீட்டில் பதுக்கிய இருவர் கைது
400 கிலோ புகையிலை பறிமுதல் வீட்டில் பதுக்கிய இருவர் கைது
ADDED : மே 03, 2024 09:12 PM
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கருமல் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்து அவர் உட்பட இருவரை கைது செய்தனர்.
முதுகுளத்துார், தேரிருவேலி, பொக்கனாரேந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள பெட்டி கடைகளுக்கு கருமல் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்வதாக முதுகுளத்துார் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கருமல் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 36, வீட்டில் சோதனை செய்த போது பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
ராமச்சந்திரன் 36, புகையிலை சப்ளை செய்த சிக்கல் அப்துல் அலி 52, ஆகியோரை தேரிருவேலி இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.