மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் 424 பேர் பங்கேற்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் 424 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 13, 2026 03:20 PM
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான பயிற்சி முகாம் அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான பயிற்சி திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது. திருவாடானை தாசில்தார் ஆண்டி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதன் தலைமை வகித்தனர். இதில் 424 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 10 பேர் குழுவினர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இது குறித்து தாசில்தார்கள் கூறியதாவது:
இப்பயிற்சி முகாம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இரு தாலுகாக்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கும். இப்பயிற்சி முடிந்தவுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் மற்றும் கிராமங்களுக்கு சென்று பணியில் ஈடுபடுவார்கள். எனவே மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் போது அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
––
