/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளிக்கு 46 மரங்கள் சாய்ந்தன
/
சூறாவளிக்கு 46 மரங்கள் சாய்ந்தன
ADDED : செப் 03, 2024 04:43 AM

திருவாடானை, : திருவாடானை அருகே பாகனுார், கிடங்கூர், இலஞ்சியமங்கலம், கட்டவிளாகம், ஆண்டாவூரணி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதில் 46 மரங்கள், 18 மின்கம்பங்கள் சாய்ந்தன. ஒன்பது ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இது குறித்து பாகனுார் ஊராட்சி தலைவர் பாப்பா கூறியதாவது:
திடீரென்று வீசிய சூறாவளிக்கு வீடுகளில் கூரைகள் துாக்கி வீசப்பட்டது. ஓட்டு வீடுகளில் சுவர்கள் இடிந்தன.
இதுவரை இல்லாத அளவிற்கு அதிவேகமாக சூறாவளி வீசியதால் விவசாயிகள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. சேதங்களை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.