ADDED : ஆக 20, 2024 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அ.நெடுங்குளம் விவசாயி மலைமேகு 68, சிலம்பன் 68. இருவரும் ஆடுகள் வளர்க்கின்றனர்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு அப்பனேந்தல், நெடுங்குளம், நாகனேந்தல், விளங்குளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது அ.நெடுங்குளத்தில் விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருந்த சிலம்பனுக்கு சொந்தமான 4 ஆடுகள், மலைமேகுவின் ஒரு ஆடு மின்னல் தாக்கி இறந்தன.
கால்நடை டாக்டர் சரவணகுமார், சாத்தனுார் ஊராட்சி தலைவர் அழகம்மாள், வி.ஏ.ஓ., கணேசமூர்த்தி பார்வையிட்டனர். நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

