ADDED : ஜூலை 23, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் வேலு 60. இவர் 2023 மார்ச் 7 ல் ஆடு வாங்குவதற்காக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கருமொழி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது டூவீலர் மோதியதில் காயமடைந்த வேலு திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு இறந்தார்.
திருவாடானை போலீசார் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை சேர்ந்த சின்னி கிருஷ்ணசர்மாவை 33, கைது செய்து திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சின்னிகிருஷ்ண சர்மாவிற்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் பிரசாத் தீர்ப்பளித்தார்.