/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் டூ காசி யாத்திரை ரயிலில் 60 பக்தர்கள் பயணம்
/
ராமேஸ்வரம் டூ காசி யாத்திரை ரயிலில் 60 பக்தர்கள் பயணம்
ராமேஸ்வரம் டூ காசி யாத்திரை ரயிலில் 60 பக்தர்கள் பயணம்
ராமேஸ்வரம் டூ காசி யாத்திரை ரயிலில் 60 பக்தர்கள் பயணம்
ADDED : மார் 06, 2025 02:31 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை இரு ஆண்டுகளாக செயல்படுத்துகிறது.
இந்த ஆண்டு 420 பக்தர்களை காசிக்கு அழைத்துச் செல்ல ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக 60 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று நேற்று இரவு மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர்.
பக்தர்கள் மார்ச் 8ல் காசி சென்ற பின் கங்கையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். பின் படகு சவாரி, கங்கை நீரை சேகரித்து விட்டு மார்ச் 9ல் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு மார்ச் 11ல் மண்டபம் வர உள்ளனர். மார்ச் 12ல் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் பக்தர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.