/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 674 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்; 5 பேர் கைது
/
ராமநாதபுரத்தில் 674 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்; 5 பேர் கைது
ராமநாதபுரத்தில் 674 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்; 5 பேர் கைது
ராமநாதபுரத்தில் 674 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்; 5 பேர் கைது
ADDED : மே 23, 2024 11:56 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 674 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் கேணிக்கரை எஸ்.ஐ., தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் அருகே கொழும்பு ஆலிம் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக டூவீலரில் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பேசியவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவர்களது வாகனத்தில் இருந்த சாக்கு பைகளை சோதனையிட்ட போது குட்கா, புகையிலைப்பொருட்கள் இருந்தன. கொழும்பு ஆலிம் பள்ளி தெருவை சேர்ந்த சுதாகர் 42, ஏர்வாடியை சேர்ந்தவரும் தற்போது முத்துப்பேட்டையில் வசிப்பவருமான பாலமுருகன் 42, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
தொடர்ந்து செவல்பட்டி ராஜவேல் 48, மேல செல்வனுார் பக்கிரிவேல் 48, காக்கூர் சண்முகராஜன் 59, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 674 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மூடைகளில் இருந்ததை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.87 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.