/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 86 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
/
ராமநாதபுரத்தில் 86 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில்சேர்வதற்கான நீட் தேர்வில் அரசு, அரசு உதவிபெறும்பள்ளிகளை சேர்ந்த 86 பேர் 129 மதிப்பெண்கள் பெற்றுமாணவர் சேர்க்கையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக உச்சிபுளி அரசுமேல்நிலை பள்ளி மாணவி ஆர்.சீமா 700க்கு 572மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.72 மாணவர்கள் தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீடு பெற தகுதிபெற்றுள்ளனர்.
குறைந்த பட்சம் 129 மதிப்பெண்ணுக்கு மேல் 86பேர் பெற்று மருத்துவக்கல்லுாரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கதகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.