/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீன் இறக்கு பாலத்தில் படகிற்கு ரூ. 200 கட்டணம் மீனவர்கள் அதிர்ச்சி
/
ராமேஸ்வரம் மீன் இறக்கு பாலத்தில் படகிற்கு ரூ. 200 கட்டணம் மீனவர்கள் அதிர்ச்சி
ராமேஸ்வரம் மீன் இறக்கு பாலத்தில் படகிற்கு ரூ. 200 கட்டணம் மீனவர்கள் அதிர்ச்சி
ராமேஸ்வரம் மீன் இறக்கு பாலத்தில் படகிற்கு ரூ. 200 கட்டணம் மீனவர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 06, 2024 02:26 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய மீன் இறக்கு பாலத்தை பராமரிப்பதற்காக படகிற்கு ரூ.200 தினசரி கட்டணம் வசூலிக்க மீன்துறை முடிவு செய்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரத்தில் மீன் இறக்கவும், படகு நிறுத்தவும் ரூ.22 கோடியில் புதிய தளம் அமைக்கப்பட்டு ஆக.20ல் முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இங்கு சிலர் மது பாட்டில்களை வீசி அசுத்தம் செய்வதால் இரு காவலர்கள், ஒரு துாய்மை பணியாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெய்லானி தலைமையில் கூட்டம் நடந்தது.
பாலத்தில் நிறுத்தும் படகிற்கு மாதம் ரூ.100, நாட்டுப்படகிற்கு ரூ.50, பாலத்தில் படகை நிறுத்தி மீன்களை இறக்கும் ஒரு படகிற்கு ஒரு நாளைக்கு ரூ.200, மீன் கம்பெனிகளிடம் மாதம் ரூ.1000 வசூலிக்க முடிவானது.
மீன் ஏற்றி செல்லும் டிராக்டர், லாரி, கனரக வாகனத்திற்கு ரூ.100, சிறியரக சரக்கு லாரிக்கு ரூ.50, பாலத்தில் நிறுத்தும் வெளியூர் படகிற்கு ஒரு நாளைக்கு ரூ.100, படகிற்கு வெல்டிங் பணிக்கு மின் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.200 வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
நான்குவழிச்சாலைசுங்க கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் டோல்கேட்டை மிஞ்சும் அளவுக்கு புதிய பாலத்திற்கு கட்டணம் வசூலிக்க இருப்பது அதிர்ச்சி அளிக்கிப்பதாகவும், வசூல் முடிவை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.