/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் இரண்டு சுவர் நடுவில் சிக்கிய பசு மாடு
/
ராமேஸ்வரத்தில் இரண்டு சுவர் நடுவில் சிக்கிய பசு மாடு
ராமேஸ்வரத்தில் இரண்டு சுவர் நடுவில் சிக்கிய பசு மாடு
ராமேஸ்வரத்தில் இரண்டு சுவர் நடுவில் சிக்கிய பசு மாடு
ADDED : ஆக 23, 2024 04:00 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இரு சுவர்கள் நடுவில் சிக்கிய பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராமேஸ்வரம் வேர்க்கோடு சேர்ந்த முனியசாமி என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இவரது வீடு அருகே தனியார் பள்ளியின் சுற்றுச் சுவர் உள்ளது. அப்பகுதியில் சுற்றித் திரிந்த பசுமாடு, முனியசாமி வீடு, பள்ளி சுவர் நடுவில் சென்று சிக்கிக் கொண்டது. இதனை அப்பகுதி மக்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள் விரைந்து வந்து மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மாட்டை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால், மாடு இரு சுவர்களுக்கு நடுவில் நுழைந்த வழியில், பின்புறமாக சாமர்த்தியமாக நகர்த்தி மீட்டனர். பசுமாட்டை காயமின்றி மீட்டதால் தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.