/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்த அரசு டவுன் பஸ்
/
எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்த அரசு டவுன் பஸ்
ADDED : மார் 22, 2024 04:44 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ் கட்டுப்பாட்டினை இழந்து எலக்ட்ரிக்கல் கடையில் புகுந்தது. யாருக்கும் பாதிப்பின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலாவதியான அரசு பஸ்கள் தான் டவுன் பஸ்களாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக டிரைவர்கள் அரசு பஸ்சை வேறு வழியின்றி இயக்கி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து புதுமடம் செல்லும் 7ஏ வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் நேற்று மதியம் 3:00 மணிக்கு உச்சிப்புளியை சேர்ந்த ராஜ்மோகன் 25, என்பவர் ஓட்டி வந்தார்.
இவர் பஸ் ஸ்டிரைக் நேரத்தில் கூலி தொழிலாளியாக பணியில் சேர்க்கப்பட்டவர்.
இவர் பஸ் ஓட்டி வந்த போது குறுக்கே ஆட்டோ வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டினை இழந்து பஸ் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்தது கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு டூவீலர்கள் சேதமடைந்துள்ளன.
மக்கள் யாரும் கடையின் முன் மக்கள் இல்லாததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.----------

