ADDED : செப் 03, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே என்.மங்கலத்தில் பட்டியல் இன மக்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர்.
தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது. தாசில்தார் அமர்நாத், பி.டி.ஓ., ஆரோக்கிய மேரிசாராள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.