/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு சேவை முடக்கம்
/
திருவாடானை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு சேவை முடக்கம்
ADDED : ஆக 05, 2024 07:09 AM
திருவாடானை : திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு சேவை இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதார் அடையாள அட்டை அத்தியாசிய தேவைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் அஞ்சலகங்கள் தோறும் ஆதார் பதிவு துவங்கப்பட்டது.
ரூ.50 கட்டணத்தில் ஆதார் அட்டைகளில் பிழைகள் திருத்தம் செய்யும் வசதியும் உண்டு.
ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய பெரும்பாலானோர் தபால் நிலையங்களில் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். திருவாடானையை தலைமையிடமாக கொண்டு 59 கிராமப்புற தபால் நிலையங்களும், 19 துணை தபால் நிலையங்களும் உள்ளன.
இதில் சின்னக்கீரமங்கலம், மங்களக்குடி ஆகிய தபால் நிலையங்களில் மட்டுமே இச்சேவை உள்ளது. திருவாடானையில் ஆதார் பதிவு இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூறுகையில், அரசு வழங்கும் சலுகை, நலத்திட்டங்கள், திருமணப்பதிவு, வீடு, நிலம், வாகனங்கள் வாங்க, விற்க என அனைத்து சேவைக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாலுகா தலைமையிடமான திருவாடானை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு சேவை முடங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனர்.