ADDED : ஜூன் 24, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி தலைமை அஞ்சல் நிலையங்கள், 29 துணை அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேர்க்கை, திருத்தம் செய்யப்படுகிறது.
புதிதாக ஆதார் கார்டு எடுக்க விரும்புவோர் இலவசமாகவும், ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டியவர்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை சேவைக்கு ஏற்ப செலுத்தி பயன்பெறலாம்.
மேலும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் துவங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியுள்ளார்.