ADDED : மார் 25, 2024 11:07 PM

பரமக்குடி,: பரமக்குடி காந்தி சிலை முன்பு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வெறுப்பு அரசியல் நோக்கத்தோடு முதல்வர் கெஜ்ரிவாலை பா.ஜ., கைது செய்துள்ளது. மேலும் அவர் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் சீனி பீர், முருகேசன், பாஸ்கர பத்மநாபன், திருமலை குமார், ராஜா, மீனா, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், வி.சி., மாவட்ட செயலாளர் பிரபாகரன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளர் விஜய் மணி, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆம் ஆத்மி நகர் செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

