/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஆரத்தி
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஆரத்தி
ADDED : ஆக 03, 2024 10:58 PM

ராமேஸ்வரம்:- ஆடிப்பெருக்கை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் வி.எச்.பி.,யினர் சமுத்திர ஆரத்தி பூஜை நடத்தினர்.
நேற்று ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்து புனித நீராடினர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை வி.எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் சமுத்திர ஆரத்தி பூஜை நடந்தது. இதில் பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், பா.ஜ., நிர்வாகிகள் ஸ்ரீதர், ராமு, வி.எச்.பி., நகர் நிர்வாகிகள் கார்த்திக், முனீஸ்வரன், முருகேஸ்வரன் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.