/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படாததால் தவிப்பு
/
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படாததால் தவிப்பு
ADDED : ஏப் 28, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இதுவரை வழங்கப்படாததால் தவிக்கின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அவர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி ஜன.2024 முதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள் இதுவரை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படாததால் தவிக்கின்றனர்.இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

