/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக்ரோஷமாக திரியும் மாடுகள்; அச்சத்தில் பரமக்குடி மக்கள்
/
ஆக்ரோஷமாக திரியும் மாடுகள்; அச்சத்தில் பரமக்குடி மக்கள்
ஆக்ரோஷமாக திரியும் மாடுகள்; அச்சத்தில் பரமக்குடி மக்கள்
ஆக்ரோஷமாக திரியும் மாடுகள்; அச்சத்தில் பரமக்குடி மக்கள்
ADDED : ஜூலை 02, 2024 10:20 PM

பரமக்குடி ; பரமக்குடி ரோடுகளில் திரியும் காளை மாடுகள் திடீரென ஆக்ரோஷமாவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பரமக்குடி நகரில் மாடுகளை வளர்ப்போர் பால் கறக்கும் நேரங்களில் மட்டும் அழைத்துச் செல்வது வாடிக்கையாகி உள்ளது. காலை முதல் இரவு வரை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் வைகை ஆற்றின் சர்வீஸ் ரோடுகளில் மாடுகள் படுத்துக் கொள்கின்றன. இவை உணவிற்காக வீடுகளின் படிகளில் நின்று கொள்கின்றன.
சில நேரங்களில் வாகன நெரிசலை ஏற்படுத்தும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக ரோட்டில் நிற்பதால் சிறிய அளவில் விபத்துக்கள் நடக்கிறது. சில காளை மாடுகள் திடீரென ஆக்ரோஷமாகி தெருக்களில் உள்ள டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ஆற்றங்கரையோர மணல் வெளிகளில் முட்டி கொள்கின்றன. மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன், உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.