/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடைகள் கடன் திட்டத்தில் குளறுபடி நகை கேட்பதால் விவசாய கூலிகள் கவலை
/
கால்நடைகள் கடன் திட்டத்தில் குளறுபடி நகை கேட்பதால் விவசாய கூலிகள் கவலை
கால்நடைகள் கடன் திட்டத்தில் குளறுபடி நகை கேட்பதால் விவசாய கூலிகள் கவலை
கால்நடைகள் கடன் திட்டத்தில் குளறுபடி நகை கேட்பதால் விவசாய கூலிகள் கவலை
ADDED : செப் 10, 2024 05:06 AM
திருவாடானை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் கால்நடைகள் வளர்ப்பிற்காக வட்டியில்லா கடன் வழங்கும் போது மாடுகளுக்கு ஈடாக நகை கேட்பதால் விவசாய கூலிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 கூட்டுறவு சங்கங்களில் கால்நடைகள் பராமரிப்பிற்காகவும், மீன்கள் வளர்க்கவும் வட்டியில்லா கடன் வழங்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையிலும், கந்துவட்டி கொடுமையிலிருந்து அவர்கள் விடுபடவும் கால்நடை வளர்ப்பிற்கான கடன் உதவி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது.
அதனை தொடர்ந்து கால்நடை வளர்க்கும் விவசாய கூலிகளுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.14,000, ஒரு ஆட்டிற்கு ரூ.1800 ம் வழங்கப்பட்டு வருகிறது. ஆடு, மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இக்கடன் வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு வட்டியில்லாததால் விவசாய கூலிகள் கடன் வாங்க கூட்டுறவு சங்கங்களை ஆர்வமாக அணுகி வருகின்றனர்.
ஆனால் மாடுகளுக்கு ஈடாக நகை கேட்பதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடன் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு அதற்கு ஈடாக நகை கொடுத்தால் தான் கடன் வழங்கப்படும் என்கின்றனர்.
உதாரணத்திற்கு இரண்டு மாடுகளுக்கு ரூ.28 ஆயிரம் வழங்கும் பட்சத்தில் அதற்கு இணையாக ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள நகை கொடுத்தால் தான் கடன் வழங்குகிறார்கள். இதனால் நகை இல்லாத ஏழை விவசாய கூலிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் திட்டம் விவசாய கூலிகள் மத்தியில் கண் துடைப்பு திட்டமாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே நகை கேட்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் மாடுகளுக்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே நகை இல்லாமல் மாடுகளுக்கு மட்டும் கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.