நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : திருப்புல்லாணி வடக்கு வீதியில் வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை தொண்டு அறக்கட்டளை சார்பில் நேற்று எட்டாம் திருநாள் மண்டகப்படியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று தேரோட்டம் நிறைவு பெற்றவுடன் வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படி கட்டடத்தில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை தொண்டு அறக்கட்டளை நிறுவனர் ரத்தினகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

