/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்: குழந்தைகளுக்கு ஆபத்து
/
அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்: குழந்தைகளுக்கு ஆபத்து
அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்: குழந்தைகளுக்கு ஆபத்து
அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்: குழந்தைகளுக்கு ஆபத்து
ADDED : செப் 01, 2024 11:48 PM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மேலமடையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்த ஓட்டு கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படுவதால் குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது.
கடந்த 2023 செப்., 1ல் மேலமடையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சேதமடைந்த அங்கன்வாடி கட்டடம் இடித்த அகற்றப்பட்டது. அதன் அருகே பயன்பாடில்லாத ஓட்டு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் 20 குழந்தைகளுடன் செயல்படுகிறது.
இங்கு மழைக்காலத்தில் விபத்து அபாயம் உள்ளது. பெற்றோர் கூறியதாவது:
அங்கன்வாடி மையத்திற்காக கடந்த ஆண்டு கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரத்தில் இருந்து அடுத்த கட்ட நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
தரமற்ற கட்டுமானம் குறித்து அப்பகுதி மக்களின் எதிர்ப்புகளால் நிறுத்தப்பட்டுள்ளது.
ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடத்தை தரமாக கட்டவும், குழந்தைகளின் நலன் கருதி குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.