ADDED : ஜூலை 11, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் உமாராணி, அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர். –––
