/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அந்தோணியார் சர்ச் தேர் பவனி விழா
/
அந்தோணியார் சர்ச் தேர் பவனி விழா
ADDED : மே 16, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை புனித வனத்து அந்தோணியார் சர்ச் 23ம் ஆண்டு விழாவில் தேர் பவனி நடந்தது.
இந்த சர்ச்சில் மே 6ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி தினமும் மாலையில், நவநாள் திருப்பலியும், நற்கருணை ஆராதனைகள் நடந்தது.
நேற்று முன்தினம் இரவில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோனியார் வீதி உலா வந்தார். அப்போது வீதிகளில் பெண்கள் மாக்கோலமிட்டு வரவேற்றனர்.
நேற்று காலையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.