/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 30, 2024 10:41 PM
ராமநாதபுரம்- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றுபவர்கள் முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த விருது ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். 15 முதல் 35 வயது வரை உள்ள தலா மூன்று ஆண், பெண்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். 2023--24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் பரிசீலிக்கப்படும். 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைதள முகவரியில்(www.sdat.tn.gov.in) விண்ணப்பங்களை மே 15 க்குள் சமர்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர்நலன் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.----------