/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழகன்குளத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்த தொல்லியல் மாணவர்கள்
/
அழகன்குளத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்த தொல்லியல் மாணவர்கள்
அழகன்குளத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்த தொல்லியல் மாணவர்கள்
அழகன்குளத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்த தொல்லியல் மாணவர்கள்
ADDED : மார் 01, 2025 06:13 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் அகழாய்வு நடந்த இடத்தை பார்வையிட வந்த தஞ்சை தமிழ் பல்கலை தொல்பொருள் ஆய்வுத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் அங்கு எந்த அடையாளமும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் 1987 முதல் எட்டு கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. இதில் 2016ல் நடந்த எட்டாவது கட்டத்தில் 13 ஆயிரம் பொருட்கள் எடுக்கப்பட்டன.
கி.மு.300 முதல் 350ம் ஆண்டு வரையிலான வாழ்க்கை முறைகள் கார்பன் சி 14 என்ற ஆய்வின் மூலம் 2360 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது வைகை ஆறும், கடலும் சங்கமிக்கும் பகுதியான ஆற்றாங்கரை பகுதி துறைமுக வணிக நகரமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய தஞ்சை தமிழ் பல்கலை தொல்லியல் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் அழகன்குளம் பகுதிக்கு வந்தனர்.
அங்கு தொல்லியல் ஆய்வு நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை. இங்கு கிடைத்த பொருட்களை தமிழக அரசு அருங்காட்சியகம் அமைப்பதாக தெரிவித்து பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. இதன் காரணமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.