/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் தள்ளு மாடல் அரசு பஸ்சால் அவதி
/
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் தள்ளு மாடல் அரசு பஸ்சால் அவதி
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் தள்ளு மாடல் அரசு பஸ்சால் அவதி
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் தள்ளு மாடல் அரசு பஸ்சால் அவதி
ADDED : ஜூலை 14, 2024 05:29 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் மதுரை அரசு போக்குவரத்துக்கழக பஸ் பழுதாகி நின்றதால் அடுத்தடுத்து பஸ்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு மதுரையில் இருந்து வந்த ஒன் டூ ஒன் பஸ் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பழுதாகி நின்றது. ஏற்கனவே குறுகிய பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் பஸ்கள் நெரிசலில் சிக்குகின்றன. இந்நிலையில் மதுரை கிளையை சேர்ந்த அரசு பஸ் பழுதடைந்து நின்றது.
பஸ் ஸ்டாண்டில் அதனை ஓராமாக நிறுத்த தள்ளிப் பார்த்து ஓய்ந்து போன பணியாளர்கள் ஒரு வழியாக ஓரம் கட்டி நிறுத்தினர். இதனால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற பஸ்களை நிறுத்த முடியாமலும், இயக்க முடியாமலும் சிரமப்பட்டனர். இந்த பஸ் பழுது நீக்க மதுரையிலிருந்து புதிய உபகரணம் கொண்டு வரப்பட்டு அதன் பின் புறப்பட்டு சென்றது. இதுபோல் தினசரி பஸ்கள் பழுதாவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.