/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு
/
மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு
ADDED : ஏப் 27, 2024 03:59 AM
பரமக்குடி: மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவிகள் பரமக்குடி அருகே அரசு பள்ளியில்சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பரமக்குடி அருகே பாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் சென்றனர். அங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கிராம பணி அனுபவம் திட்டத்தில் பயிற்சி மேற்கொண்டனர். மாணவிகள் ஜெரினா அட்லின், மித்ரா, லோச்சன், நிலோபர் ஷல்மா, கார்த்திகா, காமாட்சி, ஷ்ரேயா, பவித்ரா, மதுநிஷா பங்கேற்றனர். தொடர்ந்து மக்கும், மக்காத குப்பை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* இதேபோல் நயினார்கோவில் பகுதியில் மாணவிகள் கிராம தங்கல்திட்டத்தில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அக்கிரமேசி, பகைவென்றி, வல்லம் கிராம மக்கள் உதவியோடு கிராமம் பங்கேற்கும் மதிப்பீடு நடத்தினர்.
இதில் கிராம சமூக வரைபடம், பருவங்களும், பயிர்களை விளக்கும்வரைபடம், பிரச்னைகள்,மரம் ஆகியவற்றை வரைந்தனர். இதில் மாணவிகள் அனிதா, ஹேமா, இந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

