/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி
/
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி
அனைத்து துறைகளிலும் சாதிக்கும் ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி
ADDED : மே 22, 2024 07:57 AM
பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய சமூக மக்களின் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சபையானது ஆன்மிகப்பணி, அறப்பணி, கல்விப்பணி ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி, ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆயிர வைசிய பிஎட்., கல்லுாரி, ஆயிர வைசிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது.
பரமக்குடியில் 1984ல் ஆங்கில பிரிவில் ஆயிர வைசிய மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆரம்பித்து மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. ஆயிர வைசிய சபை மற்றும் கல்வி நிறுவனங்களில் தலைவராக பரமக்குடி ஆயிர வைசிய இளைஞர் சங்க தலைவர், முன்னாள் நகராட்சி சேர்மன் ராசிபோஸ் தற்போது வரை 27 ஆண்டு காலம் செயல்பட்டு வருகிறார்.
இணை தலைவரான பரமக்குடி ஆயிர வைசிய சமூக நல சங்க தலைவர் எஸ்.பாலுசாமி 33 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். லயன் முருகானந்தம் 6 ஆண்டாக பள்ளியின் செயலாளராகவும், ராசி ராஜேஷ்கண்ணன் பொருளாளராகவும், ராசிபிரசன்னா இணைச் செயலாளராகவும், கே.டி.ஆர்.ஆர்.பிரசன்னா இணைச் செயலாளராகவும் உள்ளனர்.
மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். ஆரோக்கியம் மேம்படுத்த உள் விளையாட்டு அரங்க போட்டிகள், கராத்தே, யோகா என மாவட்ட, மாநில, சர்வதேச அளவில் வென்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
படிப்பு, விளையாட்டு மட்டுமின்றி எங்கு போட்டி நடந்தாலும் தளராது திறமைக்கு சவால் விடும் திறனாய்வு போட்டிகளிலும் பங்கேறு, பரிசுகளையும் வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

