/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வள்ளல் சீதக்காதி சாலையில் இடையூறாக பேரிகார்டுகள்
/
வள்ளல் சீதக்காதி சாலையில் இடையூறாக பேரிகார்டுகள்
ADDED : மார் 28, 2024 10:50 PM

கீழக்கரை : கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக போலீசார் பேரிக்கார்டுகளை வைத்துள்ளனர்.
வள்ளல் சீதக்காதி சாலை அருகே முஸ்லிம் பஜார் செல்லும் ரோட்டில் குறுக்காக உள்ள பேரிக்கார்டுகளால் வேகமாக வரக்கூடிய டூவீலர்கள் விபத்துக்குள்ளாகின்றன. காலை மாலை நேரங்களில் பள்ளி வேன், அரசு பஸ் உள்ளிட்டவைகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடற்கரைக்கு செல்லும் பிரதான சாலையில் இரு புறங்களிலும் கட்டுமான பொருட்களை வைத்துள்ளதால் வாகனங்கள் செல்வதில் தொடர் நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பேரிகார்டுகளை அகற்றவும், சாலையை வழிமறித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

