/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறைச்சாலைகளின் அடிப்படை வசதி முதன்மை நீதிபதி ஆய்வு
/
சிறைச்சாலைகளின் அடிப்படை வசதி முதன்மை நீதிபதி ஆய்வு
சிறைச்சாலைகளின் அடிப்படை வசதி முதன்மை நீதிபதி ஆய்வு
சிறைச்சாலைகளின் அடிப்படை வசதி முதன்மை நீதிபதி ஆய்வு
ADDED : மே 04, 2024 04:58 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு, கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனி சிறைச்சாலை மற்றும் முதுகுளத்துார் கிளை சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நுாலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, கைதிகளின் குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வின் போது தலைமை நீதித்துறை நடுவர் கவிதா, இலவச சட்ட உதவி மையச் செயலாளர் சார்பு நீதிபதி கதிரவன் மற்றும் தாசில்தார்கள் ராமநாதபுரம் சுவாமிநாதன், திருவாடானை கார்த்திகேயன், பரமக்குடி சாந்தி, முது குளத்துார் சடையாண்டி பங்கேற்றனர்.