/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரியமானில் கடற்கரை திருவிழா தொடக்கம்
/
அரியமானில் கடற்கரை திருவிழா தொடக்கம்
ADDED : ஜூன் 16, 2024 04:46 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா துவங்கியது.
கடற்கரை திருவிழா ஜூன் 15ல் துவங்கி ஜூன் 17 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் கடற்கரை கைப்பந்து, கால்பந்து, இரவு மின்னொளி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், வகை, வகையான உணவு கூடாரங்கள்,படகு சவாரி, டிஜே மியூசிக், தண்ணீர் விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற பொழுது போக்கு அம்சங்களுடன் கடற்கரை திருவிழா நடக்கிறது.
இத்திருவிழா காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இதில் மக்கள் ஆர்வத்துடன்பங்கேற்று மகிழ்ந்திட வேண்டும் என கலெக்டர்விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
சந்தீஷ் எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.