/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய ஸ்டிக்கர் பா.ஜ., சின்ன ஸ்டிக்கர் அ.தி.மு.க.,: கனிமொழி பேச்சு
/
பெரிய ஸ்டிக்கர் பா.ஜ., சின்ன ஸ்டிக்கர் அ.தி.மு.க.,: கனிமொழி பேச்சு
பெரிய ஸ்டிக்கர் பா.ஜ., சின்ன ஸ்டிக்கர் அ.தி.மு.க.,: கனிமொழி பேச்சு
பெரிய ஸ்டிக்கர் பா.ஜ., சின்ன ஸ்டிக்கர் அ.தி.மு.க.,: கனிமொழி பேச்சு
ADDED : ஏப் 11, 2024 06:15 AM
சாயல்குடி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கனிமொழி எம்.பி., நேற்று இரவு சாயல்குடி மூக்கையூர் சந்திப்பில் ஓட்டு சேகரித்தார். அப்போது பேசியதாவது:
மத்தியில் ஆண்ட பா.ஜ., மக்களைத் கவர பெரிய ஸ்டிக்கர் ஒட்டுகிறது. அ.தி.மு.க., சின்ன ஸ்டிக்கரை ஒட்டுகிறது. முறையான பயனாளிகளை கண்டறிந்து பசுமை வீடுகளை கட்டித் தந்தது தி.மு.க., அரசே. அவற்றை தாங்கள் செய்தது போல மத்திய அரசு காட்டுகிறது.
தேர்தலுக்குப் பிறகு மோடி வீட்டுக்கு செல்வார். அப்போது அவருக்கு கஷ்டமான வேலைகள் எதுவும் இருக்காது.
ஓய்வு தான் இருக்கும். நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லக்கூடிய வலிமை இண்டியா கூட்டணிக்கு மட்டுமே உள்ளது.
மழை வெள்ளக் காலங்களில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் தற்போது தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வருகிறார்.
மத்திய அரசிற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 28 காசு மட்டுமே திரும்ப நமக்கு கிடைக்கிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. இண்டியா கூட்டணி வந்தவுடன் காஸ் சிலிண்டர் ரூ.500, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றார்.

