/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அழகன்குளத்தில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை
/
அழகன்குளத்தில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை
அழகன்குளத்தில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை
அழகன்குளத்தில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை
ADDED : ஆக 25, 2024 04:31 AM

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நாடார் வலசை குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இக்கடையில் மது அருந்தும் மதுப் பிரியர்கள் அப்பகுதியில் காலி மது பாட்டில்களை உடைத்துச் செல்வதுடன், மது போதையில் குடியிருப்பு வாசிகளிடம் பிரச்னையில் ஈடுபட்டு வருவதும் தொடர்கிறது.
இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பாதிப்படைகின்றனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி நேற்று முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ராமநாதபுரம் தாசில்தார் சுவாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கடையை அகற்றுவது தொடர்பாக கிராம பொதுமக்கள், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக.29ல் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும் என தாசில்தார் சுவாமிநாதன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.