/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் கிணற்றில் மிதந்த பெண் உடல்
/
கண்மாய் கிணற்றில் மிதந்த பெண் உடல்
ADDED : ஜூன் 07, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் முனீஸ்வரர் கோயில் அருகேயுள்ள கிணற்றில் ௫5 வயது இளம் பெண் உடல் மிதந்தது.
சக்கரக்கோட்டை முனீஸ்வரர் கோயில் அருகில் பெரிய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ௫5 வயது பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். இறந்த பெண் வைத்திருந்த மணி பர்சில் தர்மபுரி என எழுதப்பட்டுள்ளது.
சுந்தரமுடையான் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை சென்றதற்கான அரசு பஸ் டிக்கெட் உள்ளது. இறந்த பெண் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.