/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மார்ச் 21ல் புத்தகத் திருவிழா துவக்கம்
/
ராமநாதபுரத்தில் மார்ச் 21ல் புத்தகத் திருவிழா துவக்கம்
ராமநாதபுரத்தில் மார்ச் 21ல் புத்தகத் திருவிழா துவக்கம்
ராமநாதபுரத்தில் மார்ச் 21ல் புத்தகத் திருவிழா துவக்கம்
ADDED : மார் 07, 2025 08:14 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தகத் திருவிழா ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச் 21 முதல் 30 வரை நடக்கிறது.
இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
இதில் கடந்த ஆண்டை விட அதிகளவில் புத்தகங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டு மாணவர்களுடன் பெற்றோரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கவும், புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.