ADDED : மார் 09, 2025 02:48 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பதனக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் விஷ்ணுவர்த்தன் 7. அரசு தொடக்கபள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பினார்.
தந்தை உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்திருந்தார். தாய் ஆனந்தி வீட்டருகே உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது விஷ்ணுவர்த்தனை காணவில்லை.
எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு தாய் குளிக்க சென்ற கண்மாய்க்குள் விஷ்ணுவர்த்தன் உடல் மிதந்தது. அருகிலிருந்தவர்கள் உடலை மீட்டனர்.
தாய் ஆனந்தி குளித்துவிட்டு திரும்பிய போது அவருக்கு தெரியாமல் கண்மாயில் விஷ்ணுவர்த்தன் இறங்கிய போது தவறி விழுந்து இறந்துள்ளார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.