ADDED : ஜூலை 09, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: சென்னை மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் மத்திய உயிரியல் தொழில் நுட்பத் துறை நிதி உதவியுடன் இயங்கும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு முறை நிறைவு விழா நேற்று ரெகுநாதபுரத்தில் நடந்தது.
சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தெபோராள் விமலா தலைமை வகித்தார். திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன் முன்னிலை வகித்தார். களப்பணியாளர் தேவநாதன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழாவில் 60 பேர் பங்கேற்று திட்டத்திற்கான நீர் வாழ் உயிரின வளர்ப்பின் மூலம் வளர்க்கப்பட்ட மீன்களின் அறுவடை மகசூல் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.