ADDED : பிப் 27, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானையில் இருந்து திருவெற்றியூர் செல்லும் ரோட்டில் புதுப்பையூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் வீணாகியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதுஅடிக்கடி நடக்கிறது.தரமான குழாய்கள்அமைக்காததே இதற்கு காரணம். குடிநீர் வீணாவதால் மற்ற கிராமங்களுக்கு போதிய நீர் செல்லவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் குழாய் உடைப்பை சரி செய்து தரமான குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

