/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
* ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால்...காற்றுமாசு !: பெயரளவில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை
/
* ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால்...காற்றுமாசு !: பெயரளவில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை
* ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால்...காற்றுமாசு !: பெயரளவில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை
* ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால்...காற்றுமாசு !: பெயரளவில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை
UPDATED : டிச 15, 2025 06:49 AM
ADDED : டிச 15, 2025 05:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை கிடங்கில் கொட்டாமல் அந்தந்த பகுதியில் வைத்து பிளாஸ்டிக் குப்பையை எரிக்கின்றனர். இதனால் அதிலிருந்து வெளியேறும் புகை மாசு ஏற்படுத்துகிறது. திடக்கழிவு மேலாண்மைத் துறை குப்பை முறையாக அகற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மக்கள் வலியுறுத்தினர்.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் குப்பை பிரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை சேகரித்து தரம்பிரிப்பதற்கான வசதி உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் இந்த திட்டம் பெயரளவில் தான் உள்ளது. குப்பையை முறையாக அகற்றாமல் அந்தந்த பகுதியில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் காற்றுமாசு ஏற்பட்டு அவற்றை சுவாசிப்பவருக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக், துணிகள், காகிதம் என அனைத்திலும் ஒவ்வொரு விதமான கெமிக்கல் உள்ளன. அவற்றை மொத்தமாக எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுவாயு வளிமண்டலத்தை அசுத்தப்படுத்துகிறது. குப்பையை எரிக்கும்போது கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறி காற்றில் கலக்கின்றன. பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் டையாக்ஸின் போன்ற ஆபத்தான நச்சுப்புகையை சுவாசித்தால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும். அதில் உள்ள நுண்ணிய துகள்கள் நுரையீரலில் படிந்து நோய்களை உண்டாக்குகின்றன. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் காலை 8:00 மணி வரை பனி படர்ந்து காணப்படுகிறது.
வெப்பநிலை குறைந்து வானில் ஈரப்பதமாக இருப்பதால் குப்பை எரிக்கும் துகள்கள் வளிமண்டலத்தில் தங்கி மாசுப்பாட்டை அதிகரிக்கின்றன. காற்றின் வேகமும் குறைவாக இருப்பதால் ஒரே இடத்தில் மாசுபடர்ந்து உள்ளது. தனிமனித பாதிப்பு மட்டுமின்றி எரிந்த சாம்பல், நச்சுப் பொருட்கள் நிலத்தையும் நீரையும் மாசுப்படுத்துகிறது. அதனால் வீடுகள், பொது இடங்ளில் உள்ள குப்பையை தீ வைத்து எரிக்க தடைவிதித்து, மக்கும், மக்காத குப்பையை பாதுகாப்பாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

