/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்
/
கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்
கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்
கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்
ADDED : டிச 15, 2025 05:55 AM
ராமநாதபுரம்: -பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற, கல்லுாரி மாணவர்கள் டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு, அரசு உதவிப் பெறும் கல்லுாரிகள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்கப்படும்.
இளங்கலை (தொழிற் படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள மாணவர்கள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிச.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்லுாரிகளில் உள்ள உதவித்தொகை ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி கூடுதல் தகவல்களை பெறலாம்.

