/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்
ADDED : ஆக 12, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
தாசில்தார் காதர் முகைதீன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் அமலோற்பவ ஜெயராணி முன்னிலை வகித்தார். கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
துணை தாசில்தார்கள் தேவேந்திரன், வேலவன், வெங்கடேஸ்வரன், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் உட்பட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

