ADDED : பிப் 24, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை ஸ்ரீ எலைட் பிளஸ் கன்ஸ்ட்ரக்சன் (பி) லிட் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நடப்பு கல்வியாண்டில் டிப்ளமோ முடிக்க இருக்கும் சிவில் துறை மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ்குமார் வரவேற்றார். சென்னை நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகநாதன், மனிதவள மேம்பாட்டு அலுவலர் சுரேகா தேர்வை நடத்தினர். 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிவில் துறை தலைவர் செந்தில் ராஜன் நன்றி கூறினார்.

