/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்புலன்சுடன் மாயமானவர் மீது வழக்கு
/
ஆம்புலன்சுடன் மாயமானவர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2024 04:02 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் த.மு.மு.க., ஆம்புலன்ஸ்சுக்கு அவசர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தி தருவதாக கூறி ஆம்புலன்ஸ்சுடன் தலைமறைவானர் மீது வழக்கு பதிவுயப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க., மருத்துவ அணி செயலாளராக இருப்பவர் சங்கர். இவரிடம் கோவை காளிமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்புலன்ஸ்சுக்கு அவசர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தி தருவதாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட சங்கர் ஆம்புலன்ஸ்சுடன் ரூ.3.50 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மணிகண்டன் இதுவரை அவசர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தி தரவில்லை. ஆம்புலன்சையும் திருப்பித் தரவில்லை. சங்கர் புகாரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

